Origin

HomeOrigin

ஆதி மகாசித்தர் சிவபெருமான் அருள் பெற்ற ஸ்ரீ அகத்தியர் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பேனும் விதமாகவும் அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும் தனது சீடர்களாகிய போகர், அத்திரி மகரிஷி ஆகியவர்களை அழைத்துக்கொண்டு பொதிகை மலைப்பகுதிக்கு வந்து பொருநை என்று அழைக்கக்கூடிய தாமிரபரணி நதியின் நீர் உருவாகும் இடத்தில் தனது குடில்களை அமைத்து அதற்கு "வர்மக்குடில்" என பெயரிட்டு ஏழை எளிய மக்களுக்கு வர்மக்கலையின் சிகிச்சை முறைகளை கையாண்டார். அதன் பின்பு தான் உருவாக்கிய தமிழ் வர்மக்கலையின் வீரியத்தை மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக வர்மத்தாக்குதல்களை "அடவு" முறையில் பிரித்து தற்காப்புக்கலையாக உருவாக்கி அதை தனது சீடர்களாகிய அத்திரி மகரிஷிக்கும் போகருக்கும் பயிற்சியளிததார். இந்த நிலையில்... பொதிகை மலைப்பகுதியில் துஷ்ட மிருகங்களின் இடையூறுகள் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால் தனது ஆன்ம ஆற்றலை ஒன்று திரட்டி அதை விழிகளின் வழியாகப்பாய்ச்சுவதன் மூலமாக மிருகங்களை பயந்து ஓடவைக்க ஏதுவாக அத்திரி மகரிஷிக்கும் போகருக்கும் நயன தீட்சையளித்து அந்தக்கலைக்கு "பேசும் விழிகள்" என்று பெயர் வைத்தார். அந்தப்பெயர் தான் பிற்காலத்தில் மருவி "நோக்கு வர்மம்" என்று புதுப்பிறவி எடுத்தது. மேலும் ஆன்மசக்தி, விழிகளின் சக்தியுடன் மூலிகைகளின் துணைகொண்டு உடலைத்தொடாமல் எதிரியை வீழ்த்தும் "மெய் தீண்டா வர்மக்காலம்" என்ற உயர்சக்தி பிரிவும் அகத்தியாரால் உருவாக்கப்பட்டு மிகவும் ரகசிய கலையாக பாதுகக்கப்பட்டது. அகத்திய முனிவரால் தூய தமிழில் உருவாக்கப்பட்ட தமிழ்வர்மக்கலையின் பாடங்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் உருவாக்கப்பட்டு இன்றளவும் அந்தச்சுவடிகள் நாடார்குல ஆசான்களின் வீடுகளிலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூல்நிலையத்திலும் பொக்கிசமாக பாதுகக்கப்பட்டு வருவது கண்கூடான உண்மை.

இப்படி...தமிழனின் சாதனையில் புகழ் கொடி நாட்டியிருக்கும் தமிழ் வர்மக்கலையை அதன் அடவுமுறைகளையும் உணர்ந்து கொள்ளாத அறிவிலிகள் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தமிழ் கலாச்சார போர்வையில் களரி, குத்து வரிசை, சுவடுதட்டு, குங்பூ, கராத்தே போன்றவைகளைக்கற்றுக்கொண்டு வர்மக்கலை என்ற பெயரில் தன்னையும் ஏமாற்றி தன்னை நம்பி வருபவர்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்திக்கொண்டு போலி ஆசான்களாக வலம்வருபவர்களை என்னவென்று சொல்வது? வர்மக்கலை என்ற தெய்வீகக்கலையை பரம்பரை வழிவந்தவர்களால் மட்டுமே வெகு இலகுவாக அனைத்துப்பிரிவுகளையும் கையாள முடியும். அதிலும் குறிப்பாக அகத்தியமுனிவரின் அத்திரி மகரிஷியின் வாரிசுகளான சத்ரியகுல நாடார் இன மக்களுக்கு மட்டுமே முழுமையாக கைவந்த கலை!! இதிலிருந்து உங்களுக்கு ஒன்று புலப்பட்டிருக்கும். அத்திரி மகரிஷி சத்ரியகுல நாடார் இனத்தைச்சேர்ந்தவர் என்று.

இப்படி அகத்திய முனிவரின் நேரடி சீடர்களில் ஒருவரான போகர் பல நாடுகளுக்கு தேசசஞ்சாரம் சென்ற காரணத்தினால் பல்வேறு சீடர்களை உருவாக்க முடியாமல் புலிப்பாணி என்ற ஒரே ஒரு சீடர் மட்டுமே உருவானார். அதே போன்று தேரையரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அத்திரி மகரிஷி தன்குல மக்களான சத்ரியகுல நாடார் இன மக்களுக்கு தான் கற்றுக்கொண்ட தமிழ் வர்மக்கலையை முழுமையாக காற்றுக்கொடுத்ததன் காரணமாக வர்மக்கலை சத்ரியகுல நாடர்களின் குல சொத்தாகிப்போனது.

ஆனால்... நாங்கள் 1991ம் ஆண்டு முதல் இன்றைய காலகட்டம் வரை குலமுறையை தவிர்த்து அனைத்து இன மக்களுக்கும் தமிழ் வர்மக்கலையின் ரகசியங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் முழுமையாக பயிற்சியளித்து வருகின்றோம். இன்றைய தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் யாரைப்பார்த்தாலும் வர்மஆசான் என்ற போர்டு மாட்டிக்கொண்டு அசத்தலாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக "நோக்கு வர்மம்" கற்றுத்தருகிறேன் என்ற பெயரில் வர்ம ஆற்றலை பயன்படுத்தாமல் மாந்திரீகக்கலையை பயன்படுத்தி புனிதமான நோக்கு வர்மக்கலையை சித்துவிளையாட்டால் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வர்மக்கலையின் மீது பற்று கொண்ட ஆர்வலர்களே... நீங்கள் தமிழ் வர்மக்கலையின் ரகசியங்கள் யாவையும் நல்ல முறையில் முழுமையாக பயில வேண்டுமா!.. வாருங்கள் ஆசான் டிராகன் டி ஜெய்ராஜ்-ன் தமிழ் வர்மக்கலை அரனுக்கு...

Sri Bogar siddhar - ஸ்ரீ போக மாமுனிவர்
  • Sri Pulipani siddhar-ஸ்ரீ புலிப்பாணி சித்தர்
    • Family and disciples of sri Pulipani siddhar-ஸ்ரீ புலிப்பாணி சித்தரின் சந்ததிகள்
  • Sri Therayar siddhar-ஸ்ரீ தேரையர் சித்தர்
  • Sri Kuppaimeniyan rishi-ஸ்ரீ குப்பைமேனியான் ரிஷி
Sri Atthiri Maharishi - ஸ்ரீ அத்திரி மகரிஷி
  • Madavageesa rishi-மாதவகீச ரிஷி
  • Sadaiyan perumal rishi-சடையன் பெருமாள் ரிஷி
  • Sivanaindha rishi-சிவனைந்த ரிஷி
  • Shenbagapperumal rishi-செண்பகப்பெருமாள் ரிஷி
  • Sivavelava sandhana rishi-சிவவேலவ சந்தன ரிஷி
  • Brahma bala rishi-பிரம்ம பால ரிஷி
  • Mahakaala rishi-மகாக்கால ரிஷி
  • Kadavan kaala rishi-கடவன்கால ரிஷி
  • Thilaravan kaala rishi-திலரவன்கால ரிஷி
  • Sri Therisami rishi-ஸ்ரீ தேரிச்சாமி ரிஷி
  • Sivanaandi naadar-சிவனாண்டி நாடார்
  • Sudalaimani naadar-சுடலைமணி நாடார்
  • Gurusami naadar-குருசாமி நாடார்
  • Dragon T Jayraj naadar-டிராகன் T ஜெய்ராஜ் நாடார்
  • Dragon J Archana - டிராகன் J அர்ச்சனா - J Sindhumathi - J சிந்துமதி
Students of Sivanandi naadar - சிவனாண்டி நாடாரின் சீடர்கள்
  • Gurusami naadar - குருசாமி நாடார்
  • Thangaraj naadar - தங்கராஜ் நாடார்
  • Chandra naadathi - சந்திரா நாடாத்தி
  • Rajammal naadathi - ராஜம்மாள் நாடாத்தி
Students of Gurusami naadar - குருசாமி நாடாரின் சீடர்கள்
  • Ilaiyaperumal naadar - இளையபெருமாள் நாடார்
  • Perumal naadar - பெருமாள் நாடார்
  • Chandra naadathi - சந்திரா நாடாத்தி
  • Valartha naadar - வளர்த்த நாடார்
  • Dragon T Jayraj naadar - டிராகன் T ஜெய்ராஜ் நாடார்
  • Muttiah naadar - முத்தையா நாடார்
  • Vizhivendan naadar - விழிவேந்தன் நாடார்
  • P Gurusami naadar - பா குருசாமி நாடார்
  • Arumuga naadar - ஆறுமுக நாடார்
  • Soundarapandiya naadar - சௌந்தரபாண்டிய நாடார்
  • Mani naadar - மணி நாடார்
  • Devaraj naadar - தேவராஜ் நாடார்
  • Soundarapal naadar - சௌந்தரபால் நாடார்
  • Soundararaj naadar - சௌந்தரராஜ் நாடார்
  • Isakimuthu naadar - இசக்கிமுத்து நாடார்
  • Periyasami naadar - பெரியசாமி நாடார்
Ezhava* Students of Gurusami naadar - குருசாமி நாடாரின் கேரள ஈழவ*சீடர்கள்
  • Marthandan - மார்த்தாண்டன்
  • Sellappan - செல்லப்பன்
  • Muruga boopathi - முருக பூபதி
  • Manimaran - மணிமாறன்
  • Rathinavel - இரத்தினவேல்
  • Madasamy - மாடசாமி
  • Samiyappan - சாமியப்பன்
  • Vijayavannan - விஜயவண்ணன்
  • Palgunan - பல்குணன்
  • Aathi narayanan - ஆதிநாராயணன்
  • Pakkirinathan - பக்கிரிநாதன்
  • Damotharan - தாமோதரன்
  • Isakimuthu - இசக்கிமுத்து
  • Kavuthalai muthu - கவுதலைமுத்து
  • Ponnaiya - பொன்னையா
  • Sagadevan - சகாதேவன்
  • Pechimuthu - பேச்சிமுத்து
  • Daniel - தானியேல்
  • Solomon - சாலமோன்
Students who learnt Adavu Varmam and Varmam Theraphy from Dragon T Jayraj - டிராகன் T ஜெய்ராஜ்ஜிடம் அடவு வர்மம் மற்றும் வர்மமருத்துவம் கற்றுக்கொண்ட முக்கிய மாணவர்கள்
  • T Kandeepan - T காண்டீபன்
  • Balakrishnan - பாலகிருஷ்ணன்
  • T S Prabhu - T S பிரபு
  • E Raguprasad - E ரகுபிரசாத்
  • V Ravichandran - V ரவிச்சந்திரன்
  • Sivasakthivel - சிவசக்திவேல்
  • S Senthil kumar - S செந்தில் குமார்
  • A Saravanan - A சரவணன்
  • Udhayakumar - உதயகுமார்
  • Nandha gopal - நந்தகோபால்
  • Murugan (CRI) - முருகன்
  • Kosal ramanujam - கோசல் ராமானுஜம்
  • Vanjimuthu - வஞ்சிமுத்து
  • Ravikumar - ரவிகுமார்
  • Saravanan - சரவணன்
  • Karuppusami - கருப்புசாமி
  • Seenivasan - சீனிவாசன்
  • Manivannan - மணிவண்ணன்
  • Gokila - கோகிலா
  • Vijayalakshmi - விஜயலக்ஷ்மி
  • Kannan - கண்ணன்
  • Basukannar - பாசுகண்ணர்
  • Senthil kumar - செந்தில் குமார்
  • Lebanan Bero - லெபனான் பெரொ
  • Saravanan - சரவணன்
  • Sahul Hameed - சாகுல் ஹமீத்
  • Mohamad Abbas - மொஹமத் அப்பாஸ்
  • Selvam - செல்வம்
  • Ramachandran - ராமச்சந்திரன்
  • Manjunath - மஞ்சுநாத்
  • Lingam - லிங்கம்
  • Jambulingam - ஜம்புலிங்கம்
  • John - ஜான்
  • Lakshmanan - லட்சுமனன்
  • Gunasekaran - குணசேகரன்
  • Karthikeyan - கார்த்திகேயன்
  • Venkateshwaran - வெங்கடேஷ்வரன்
  • Deenathayalan - தீனதயாளன்
  • Ramesh - ரமேஷ்
  • Saktivel - சக்திவேல்
  • Ranjith - ரஞ்சித்
  • Rajesh kannan - ராஜேஷ் கண்ணன்
  • Suresh kannan - சுரேஷ் கண்ணன்
  • Jayan - ஜெயன்
  • Poornima - பூர்ணிமா
  • Muruganandham - முருகானந்தம்
  • Ramsingh - ராம்சிங்
  • Pratheeba - பிரதீபா

*Ezhavas

The Ezhavas are a community with origins in the region of India presently known as Kerala. When they came for farming palm trees (to Elluvilai near Thiruchendur), they learnt Varmakkalai from Aasan Gurusami naadar. It is only through them Varmakkalai has spread in Nagercoil, Kanyakumari and southern Kerala and transformed as southern kalaripayatru.

*ஈழவர்

ஈழவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்டவர்கள். திருச்செந்தூர் அருகிலுள்ள எள்ளுவிளை கிராமத்திற்கு பனைமரம் ஏறுவதற்காக வந்திருந்தபோது ஆசான் குருசாமி நாடாரிடம் வர்மக்கலை கற்றுக்கொண்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தெற்கு கேரளாவில் வர்மக்கலை பரவியதற்கும் தெற்க்கன் களரி தோன்றுவதற்கும் இவர்களே முதன்மயான காரணமாகும்.