gallery/header

தமிழ் வர்மக்கலை

Tamil varmakkalai

ஆதி மகாசித்தர் சிவபெருமான் அருள் பெற்ற ஸ்ரீ அகத்தியர் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பேனும் விதமாகவும் அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும் தனது சீடர்களாகிய போகர், அத்திரி மகரிஷி ஆகியவர்களை அழைத்துக்கொண்டு பொதிகை மலைப்பகுதிக்கு வந்து பொருநை என்று அழைக்கக்கூடிய தாமிரபரணி நதியின் நீர் உருவாகும் இடத்தில் தனது குடில்களை அமைத்து அதற்கு "வர்மக்குடில்" என பெயரிட்டு ஏழை எளிய மக்களுக்கு வர்மக்கலையின் சிகிச்சை முறைகளை கையாண்டார். அதன் பின்பு தான் உருவாக்கிய தமிழ் வர்மக்கலையின் வீரியத்தை மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக வர்மத்தாக்குதல்களை "அடவு" முறையில் பிரித்து தற்காப்புக்கலையாக உருவாக்கி அதை தனது சீடர்களாகிய அத்திரி மகரிஷிக்கும் போகருக்கும் பயிற்சியளிததார். இந்த நிலையில்... பொதிகை மலைப்பகுதியில் துஷ்ட மிருகங்களின் இடையூறுகள் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால் தனது ஆன்ம ஆற்றலை ஒன்று திரட்டி அதை விழிகளின் வழியாகப்பாய்ச்சுவதன் மூலமாக மிருகங்களை பயந்து ஓடவைக்க ஏதுவாக அத்திரி மகரிஷிக்கும் போகருக்கும் நயன தீட்சையளித்து அந்தக்கலைக்கு "பேசும் விழிகள்" என்று பெயர் வைத்தார். அந்தப்பெயர் தான் பிற்காலத்தில் மருவி "நோக்கு வர்மம்" என்று புதுப்பிறவி எடுத்தது. மேலும் ஆன்மசக்தி, விழிகளின் சக்தியுடன் மூலிகைகளின் துணைகொண்டு உடலைத்தொடாமல் எதிரியை வீழ்த்தும் "மெய் தீண்டா வர்மக்காலம்" என்ற உயர்சக்தி பிரிவும் அகத்தியாரால் உருவாக்கப்பட்டு மிகவும் ரகசிய கலையாக பாதுகக்கப்பட்டது. அகத்திய முனிவரால் தூய தமிழில் உருவாக்கப்பட்ட தமிழ்வர்மக்கலையின் பாடங்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் உருவாக்கப்பட்டு இன்றளவும் அந்தச்சுவடிகள் நாடார்குல ஆசான்களின் வீடுகளிலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூல்நிலையத்திலும் பொக்கிசமாக பாதுகக்கப்பட்டு வருவது கண்கூடான உண்மை.

இப்படி...தமிழனின் சாதனையில் புகழ் கொடி நாட்டியிருக்கும் தமிழ் வர்மக்கலையை அதன் அடவுமுறைகளையும் உணர்ந்து கொள்ளாத அறிவிலிகள் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தமிழ் கலாச்சார போர்வையில் களரி, குத்து வரிசை, சுவடுதட்டு, குங்பூ, கராத்தே போன்றவைகளைக்கற்றுக்கொண்டு வர்மக்கலை என்ற பெயரில் தன்னையும் ஏமாற்றி தன்னை நம்பி வருபவர்களையும் ஏமாற்றி வயிறு வளர்த்திக்கொண்டு போலி ஆசான்களாக வலம்வருபவர்களை என்னவென்று சொல்வது? வர்மக்கலை என்ற தெய்வீகக்கலையை பரம்பரை வழிவந்தவர்களால் மட்டுமே வெகு இலகுவாக அனைத்துப்பிரிவுகளையும் கையாள முடியும். அதிலும் குறிப்பாக அகத்தியமுனிவரின் அத்திரி மகரிஷியின் வாரிசுகளான சத்ரியகுல நாடார் இன மக்களுக்கு மட்டுமே முழுமையாக கைவந்த கலை!! இதிலிருந்து உங்களுக்கு ஒன்று புலப்பட்டிருக்கும். அத்திரி மகரிஷி சத்ரியகுல நாடார் இனத்தைச்சேர்ந்தவர் என்று.

இப்படி அகத்திய முனிவரின் நேரடி சீடர்களில் ஒருவரான போகர் பல நாடுகளுக்கு தேசசஞ்சாரம் சென்ற காரணத்தினால் பல்வேறு சீடர்களை உருவாக்க முடியாமல் புலிப்பாணி என்ற ஒரே ஒரு சீடர் மட்டுமே உருவானார். அதே போன்று தேரையரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அத்திரி மகரிஷி தன்குல மக்களான சத்ரியகுல நாடார் இன மக்களுக்கு தான் கற்றுக்கொண்ட தமிழ் வர்மக்கலையை முழுமையாக காற்றுக்கொடுத்ததன் காரணமாக வர்மக்கலை சத்ரியகுல நாடர்களின் குல சொத்தாகிப்போனது.

ஆனால்... நாங்கள் 1991ம் ஆண்டு முதல் இன்றைய காலகட்டம் வரை குலமுறையை தவிர்த்து அனைத்து இன மக்களுக்கும் தமிழ் வர்மக்கலையின் ரகசியங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் முழுமையாக பயிற்சியளித்து வருகின்றோம். இன்றைய தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் யாரைப்பார்த்தாலும் வர்மஆசான் என்ற போர்டு மாட்டிக்கொண்டு அசத்தலாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக "நோக்கு வர்மம்" கற்றுத்தருகிறேன் என்ற பெயரில் வர்ம ஆற்றலை பயன்படுத்தாமல் மாந்திரீகக்கலையை பயன்படுத்தி புனிதமான நோக்கு வர்மக்கலையை சித்துவிளையாட்டால் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வர்மக்கலையின் மீது பற்று கொண்ட ஆர்வலர்களே... நீங்கள் தமிழ் வர்மக்கலையின் ரகசியங்கள் யாவையும் நல்ல முறையில் முழுமையாக பயில வேண்டுமா!.. வாருங்கள் ஆசான் டிராகன் டி ஜெய்ராஜ்-ன் தமிழ் வர்மக்கலை அரனுக்கு...

நோக்குவர்மம் என்பர்
அதில்வித்தகன் என்பர்
கயிறதை மணல்திரிப்பேன் என்பர்
என் உடல்சக்தி என்பர்
குருட்டு பார்வையதை நயனபாசை என்பர்
தான் தான் இறைவன் என்பர்
இவ்வையகமே காலடியில் என்பர்
உலகசித்தன் நானடா என்பர்
புறம்பேசி புறத்துரைத்து
உயிர்வாழும் வீணர்களின்
சித்துவேலைகளில்
கவனமது அகற்றி
கருத்துடனே வெகுபாங்காய்
முனிசொல் கேட்டு
நல்குருவின் பாதமது பணிந்தே
பேசும்விழியதில் செயலதை நாட்டிட
மெய்தீண்டாக்கலையும்
உவகையுடனே பலிதமடா


                                         - ஸ்ரீ அகத்தியர்
                                           வர்மமாலை

gallery/varmamalai_agathiyar

பச்சிலை அறியாத மடையரெல்லாம்
படைக்கு கச்சை கட்டி பாவம் செய்வார்
இச்சைப் பெற்று ஆசானய் பேரும் பெற்று
மகத்தான வர்மமது அறிவோம் என்பர்
மைந்தா புரட்டர்களது கண்படாது
திரை வளைந்து அதனுள்ளில்
வர்ம ஈடு கொண்டவனை கிடத்தி
வர்ம இளக்குமுறை நிகழ்த்தடா
நிலைகுலைந்து மாத்திரையில் மீறினாக்கள்
வல்லவனே வர்மமது இளகிடாது
காலம் உச்சி கொண்டு தானால்
பரிவுடனே நாழிகை பார்க்க வேண்டாம்
மாத்திரை தான் கடந்த தானால்
மைந்தனே கண்டறி நீ மருந்தீயாதே
ஆனாலும் பாதகமில்லை அடங்கல் புரிந்தவர்க்கு
மகனே மனம் பேதலிக்காமல் மறு அடங்கல்
அதை பெருவிரலால் கிளர்த்தி
கூற்றுவன் கவர்ந்த உயிரை
இப்பூமியில் உலவ விடடா

                                                       -ஸ்ரீ புலிப்பாணி சித்தர்
                                                        வர்மக்கண்ணாடி

gallery/varmakkannadi_pulipaani
gallery/kadavul kaappu_resized

இறை வணக்கம்
தியானம் இரண்டாம் நிலை
நுனிநோக்கல் தியானம்
இடது வலது புள்ளிப்பயிற்சி
ஒற்றைப்புள்ளி நோக்கல்
வான்காந்தப்பயிற்சி
பூமிப்பிராணன் பயிற்சி
விளக்குப்பயிற்சி - முதல் நிலை
விளக்குப்பயிற்சி - இரண்டாம் நிலை
விளக்குப்பயிற்சி - மூன்றாம் நிலை
அருகில் தொலைவில் விளக்குப்பயிற்சி - நான்காம் நிலை
நேர்நிலை விளக்குப்பயிற்சி
சூரிய ஒளிப்பயிற்சி
ஆதிஅந்த ஒளிப்பயிற்சி
புருவமத்தி மெழுகு பயிற்சி
ஓரக்கண் ஒளிப்பயிற்சி
எதிர்விழிப்பயிற்சி (பிம்பப்பயிற்சி)
எலுமிசசம்பழப்பயிற்சி
படுமனக்கட்டளை
பரகாயவெளி பயிற்சி
ரிஷி தீட்சை
மந்திரப்பயிற்சி
தாமரை தியானம்

பயிற்சிகள்

தாமரை தியானம்

தாமரை, தாமரை இலை தண்ணீர் தத்துவம்
ஆனால் நான் மிகவும் உறுதியானவன் / உறுதியானவள்
ஐம்பெரும் பஞ்சபூதங்களே
எனது உடலுக்கு சக்தியளித்து
அமைதியை தாருங்கள்
இயற்கை சக்தியே சரணம்
இயற்கை சக்தியே சரணம்
இயற்கை சக்தியே சரணம்
                                                                                            

                                                                                             - வர்மப்பேராசான் டிராகன் டி ஜெய்ராஜ்